Monday, May 4, 2020

Virus Tears - Migrant Worker - கிருமி கண்ணீர்



கருமியாக இருந்தாலும் பரவாயில்லை
கிருமியோட இருக்கக் கூடாது
பெருமையாக வாழவில்லை பரவாயில்லை
வறுமையாக வாழமட்டும் கூடாது

வேலையில்லை என்றாலும் பரவாயில்லை
சேலை மட்டும் உடுத்தவிடு
எவ்வூரில் இருந்தாலும் பரவாயில்லை
சொந்தவூரில் மட்டும் விட்டுவிடு

ஈரத்துண்டு கட்டினாலும் பரவாயில்லை
குழந்தைக்கு பாலைமட்டும் கொடுத்துவிடு
கண்ணீரோடு உறங்கினாலும் பரவாயில்லை
காலை உயிருடன் இருக்கவிடு

நடந்தே சென்றாலும் பரவாயில்லை
பாதை மட்டும் திறந்துவிடு
புன்னகை மறந்தாலும் பரவாயில்லை
கால்புண்ணை சற்று அகற்றிவிடு


கடவுள் வரவில்லை பரவாயில்லை
இருக்கிறார் என்று சொல்லிவிடு
மற்றென்ன நடந்தாலும் பரவாயில்லை
இன்று குடும்பத்துடன் சேர்த்துவிடு


Karumiyaaga Irundhaalum Paravayillai
Kirumiyoada Irukka Koodaadhu
Perumayaaga Vaazhavillai Paravaayillai
Varumaiyaaga Vaaazhamattum Koodaadhu

Veylaiyillai Endraalum Paravaayillai  
Seylai Mattum Udhuthavidu  
Evvooril Irundhaalum Paravaayillai
Sondhavooril Mattum Vittuvidu

Eerathundu Kattinaalum Paravayillai
Kuzhandhaiku Paalaimattum Koduthuvidu
Kanneerodu Uranginaalum Paravayillai
Kaalai Uyirudan Irukkavidu

Nadandhey Sendraalum Paravaayillai
Paadhai Mattum Thirandhuvidu
Punnagai Marandhaalum Paravaayillai
Kaalpunnai Sattru Agatrividu

 Kadavul Varavillai Paravaayillai
Irukkiraar Endru Sollividu
Mattrenna Nadandhaalum Paravaayillai
Indru Kudumathudan Seyrthuvidu

No comments:

Post a Comment