Sunday, November 16, 2014

Kann Dhaanam

Paarka Paarka Aanandham Indha
Ulagai Paarthu Paarthu Peyrinbam
Varunanaikku Kooda Sollukku Balamillai
Azhagho Azhagu Idharku Yellaiyeyillai

Irundhum Yenna Palarukku Payanillai
Kaalaiyenna Maalaiyenna Puriyavillai
Ini Poagum Paadhai Vilangavillai
Paarthavan Mugam Kooda Theriyavillai

Manidhaney Neeyirukkum Varai Sugappadu
Madindhavudan Vun Kannai Kodu
Iruttu Ulagirku Velicham Thaa
Sooriyanaai Nee Olirndhu Vaa


பார்க்க பார்க்க ஆனந்தம் இந்த
உலகை பார்த்து பார்த்து பேரின்பம்
வருணனைக்கு கூட சொல்லுக்கு பலமில்லை
அழகோ அழகு இதற்கு எல்லையேயில்லை

இருந்தும் என்ன பலருக்கு பயனில்லை
காலையென்ன மாலையென்ன புரியவில்லை
இனி போகும் பாதை விளங்கவில்லை
பார்த்தவன் முகம் கூட தெரியவில்லை

மனிதனே நீயிருக்கும் வரை சுகப்படு
மடிந்தவுடன் உன் கண்ணை கொடு
இருட்டு உலகிற்கு வெளிச்சம் தா
சூரியனாய் நீ ஒளிர்ந்து வா

Saturday, May 17, 2014

Manam Thirandhidu

Kan Moodi Thirandhaal Ezhuchchi
Kai Moodi Thirandhaal Dhaanam
Vai Moodi Thirandhaal Punnagai
Manamo Thirandhey Irundhaal Maghizhchi


கண் மூடி திறந்தால் எழுச்சி
கை மூடி திறந்தால் தானம்
வாய் மூடி திறந்தால் புன்னகை
மனமோ திறந்தே இருந்தால் மகிழ்ச்சி

Wednesday, April 30, 2014

Kaadhal Unarvu

Inippaai Kaniyaai Suvaikkum Pozhudhu
Malaraai Oliyaai Malarum Pozhudhu
Un Ninaivaai

Unarndhaen Suvaithaen Malarndhaen Amudhaey
Un Iniya Kuralai Kaettu Kaettu
Oru Kavingyan Aaghi Nindraen


இனிப்பாய் கனியாய் சுவைக்கும் பொழுது
மலராய் ஒளியாய் மலரும் பொழுது
உன் நினைவாய்

உணர்ந்தேன் சுவைத்தேன் மலர்ந்தேன் அமுதே 
உன் இனிய குரலை கேட்டு கேட்டு
ஒரு கவிஞனாகி நின்றேன்

Monday, September 28, 2009

Aarogiyam

Panam Irundhaal Anthasthu Uyarum
Pugazh Seyrndhaal Madhippu Valarum

Udal Soarndhaal Nimmadhi Kuraiyum
Panam Pugazh Payanatru Poagum

Yedhai Marandhaalum Udalnalam Marakkaadhey
Yedhai Izhandhaalum Aarogiyam Izhakkaadhey


பணம் இருந்தால் அந்தஸ்து உயரும்
புகழ் சேர்ந்தால் மதிப்பு வளரும்

உடல் சோர்ந்தால் நிம்மதி குறையும்
பணம் புகழ் பயனற்று போகும்


எதை மறந்தாலும் உடல்நலம் மறக்காதே
எதை இழந்தாலும் ஆரோக்கியம் இழக்காதே

Wednesday, September 23, 2009

Thirumanam

Vidiyar Kaalaiyil Pirandha Veettil
Nee Yaaroa Naan Yaaroa

Nodi Pozhudhil Mana Maeydaiyil
Nee Manaivi Naan Kanavan

Iru Manam Saerndha Thirumanam
Ini Varum Kaalam Nammidam

Anbu Paasam Pagirndha Vannam
Bandham Niththam Valarndha Yennam விடியற் காலையில் பிறந்த வீட்டில்
நீ யாரோ நான் யாரோ

நொடி பொழுதில் மண மேடையில்
நீ மனைவி நான் கணவன்

இரு மனம் சேர்ந்த திருமணம்
இனி வரும் காலம் நம்மிடம்

அன்பு பாசம் பகிர்ந்த வண்ணம்
பந்தம் நித்‌தம் வளர்ந்த எண்ணம்Tuesday, September 22, 2009

Aval Paarvai

Sattendru Udal Silirthadhu Nenju Kulirndhadhu
Mugam Jolithadhu Pudhu Sakthi Pirandhadhu

Neram Viraindhadhu Unavu Dhaagam Theerndhadhu
Svaasam Yaekkam Kalandhadhu Uyirnaadi Viraindhadhu

Oru Paarvaiyil Vaazhvin Noakkam Purindhadhu
Kan Simitta Kaadhal Thadai Seidhadhu


சட்டென்று உடல் சிலிர்த்தது நெஞ்சு குளிர்ந்தது
முகம் ஜொலித்தது புது சக்தி பிறந்தது

நேரம் விரைந்தது உணவு தாகம் தீர்ந்தது
சுவாசம் ஏக்கம் கலந்தது உயிர்நாடி விரைந்தது

ஒரு பார்வையில் வாழ்வின் நோக்கம் புரிந்தது
கண் சிமிட்ட காதல் தடை செய்தது

Kavithai Unarvu

Nalla Kavithai Kaettal
Manam Satru Yaengum

Vaanam Vittu Vilagum
Boomi Baaram Kuraiyum

Irul Oli Naadum
Thendral Mella Thavazhum

Chaaral Thulli Paadum
Poo Manam Veesum

Anbum Niraivum Puriyum
Ulagam Unnil Theriyum


நல்ல கவிதை கேட்டால்
மனம் சற்று ஏங்கும்

வானம் விட்டு விலகும்
பூமி பாரம் குறையும்

இருள் ஒளி நாடும்
தென்றல் மெல்ல தவழும்

சாரல் துள்ளி பாடும்
பூ மனம் வீசும்

அன்பும் நிறைவும் புரியும்
உலகம் உன்னில் தெரியும்

Thendral

Mella Thirindha Unkoondhal
Ennai Thazhuvum Tharunam

Naanam Niraindha Maeni
Katti Pinaikka Yaengum


மெல்ல திரிந்த உன் கூந்தல்
என்னை தழுவும் தருணம்


நானம் நிறைந்த மேனி
கட்டி பிணைக்க ஏங்கும்

Sunday, September 20, 2009

Nandri Maravaadhey

Varumai Unnai Satru Naadinaal
Palar Unnai Vittu Oaduvaar

Yevan Than Sumai Marandhu
Unnilai Unarndhu Karam Kodhuthaanoa

Avanai Uyir Ullavarai Maravaadhey


வறுமை உன்னை சற்று நாடினால்
பலர் உன்னை விட்டு ஓடுவார்

எவன் தன் சுமை மறந்து
உன் நிலை உணர்ந்து கரம் கொடுத்தானோ


அவனை உயிர் உள்ளவரை மறவாதே

Wednesday, September 16, 2009

Yaezhaiyin Sirippu

Panappu Manappu Suvaippu Unninaippu
Pizhaippu Udaippu Unavu Avanthavippu

Theyvaikku Adhigam Irukku Unakku
Koduthu Maghizhu Yaezhaiyin Sirippu


பணப்பு மணப்பு சுவைப்பு உன் நினைப்பு 
பிழைப்பு உடைப்பு உணவு அவன் தவிப்பு

தேவைக்கு அதிகம் இருக்கு உனக்கு
கொடுத்து மகிழு ஏழையின் சிரிப்பு

Adaikkalam

Vaazha Ninaikkum Manidhanukku
Saavai Kaattum Ikkaalathil

Oru Seylai Mattum Kattiyapadi
Vaelai Kaettu Varum Penmanikku

Vaelai Enna Vaelai Unakkuyen
Vaazhkaiye Thaaruvaen Yenbaane
Thamizhan


வாழ நினைக்கும் மனிதனுக்கு
சாவை காட்டும் இக்காலத்தில்

ஒரு சேலை மட்டும் கட்டியபடி
வேலை கேட்டு வரும் பெண்மணிக்கு

வேலை என்ன வேலை உனக்கு என்
வாழ்க்கையே தாருவேன் என்பானே
தமிழன்

Inaiyam

Yaekkangal Pala Ennangal Koadi
Manamvittu Pesalaam Endra Ninaippu
Veettiloa Idharku Pala Yedhirpu

Inidhai Pazhaga Ilavasamai Pinaithaiyae
Veetil Amarndhae Avarainaan Konjavae
Inaiyamae Yengalai Inaitha Dheivamae


ஏக்கங்கள் பல எண்ணங்கள் கோடி
மனம்விட்டு பேசலாம் என்ற நினைப்பு
வீட்டிலோ இதற்கு பல எதிர்ப்பு

இனிதாய் பழக இலவசமாய் பிணைத்தாயே
வீட்டில் அமர்ந்தே அவரை நான் கொஞ்சவே
இணையமே எங்களை இணைத்த தெய்வமே

Vaazhkai Naadagam

Yaar Ingae Yaar Nadathum Naadagam
Idhan Aarambam Yenna Mudivu Yenna

Yaen Pirandhu Malarndhu Nondhu Madigirome
Niraiya Aanandham Niraivil Soagam Yedharku


யார் இங்கே யார் நடத்தும் நாடகம்
இதன் ஆரம்பம் என்ன முடிவு என்ன

ஏன் பிறந்து மலர்ந்து நொந்து மடிகிறோம்
நிறைய ஆனந்தம் நிறைவில் சோகம் எதற்கு

Nalla Neram

Yedhu Nalla Neram Yendru Kaettal
Pinam Kooda Yezhundhu Nindru Sirikkum

Vidhi Vella Madhi Vaendum Maganae
Manam Irundhaal Kaalam Unnai Naadum


எது நல்ல நேரம் என்று கேட்டால்
பிணம் கூட எழுந்து நின்று சிரிக்கும்

விதி வெல்ல மதி வேண்டும் மகனே
மனம் இருந்தால் காலம் உன்னை நாடும்