Monday, May 4, 2020

Bank Bankrupt - வங்கியில் பணமில்லை


வங்கியிலே எனக்கு பணமிருக்கு
இன்னும் சேர்க்க பலமிருக்கு
மடியிலே கொஞ்சம் கனமிருக்கு

கணக்கு பார்த்த மகிழ்விருக்கு
கனவு உலகில் மிதந்திருக்கு
வேர்வை சிந்திய மணமிருக்கு

அந்தஸ்து உயர்ந்த சுகமெனக்கு
ஏளனமாய் பார்த்த திமிறிருக்கு
பழமை சட்டென்று மறந்திருக்கு

நிம்மதி தினம் குறைந்திருக்கு
கொழுப்பு நிறைய வளர்ந்திருக்கு
கோவம் கொத்தாய் பூத்திருக்கு

நினைத்து பார்த்த குணமிருக்கு
போதும் நிறைவு மலர்ந்திருக்கு
கொடுத்து வாழ நினைப்பிருக்கு

பணம் திரும்ப எடுப்பதற்கு
வங்கி சென்று பார்த்ததற்கு
பூட்டு ஒன்று போட்டிருக்கு

மனம் திறந்த மாற்றத்திற்கு
வங்கி மூடிய காட்சிக்கு
எல்லாம் போன உணர்வெனக்கு

பணம் என்னை வீழ்த்திருக்கு
நிறைவின் அர்த்தம் உணர்த்திருக்கு
வாழ்வின் பாடம் புரிந்திருக்கு


Vangiyiley Enakku Panamirukku
Innum Seyrkka Balamirukku
Madiyiley Konjam Ganamirukku

Kanakku Paarthaa Maghizhvirukku
Kanavu Ulagil Midhandhirukku
Veyrvai Sindhiya Manamirukku

Anthasthu Uyarndha Sugamenakku
Yelanamai Paartha Thimirirukku
Pazhamai Sattendru Marandhirukku

Nimmadhi Dhinam Kuraindhirukku
Kozhuppu Niraiya Valarndhirukku
Kovam Koththaai  Poothirukku

Ninaithu Paartha Gunamirukku
Poadhum Niraivu Malarndhirukku
Koduthu Vaazha Ninaippirukku

Panam Thirumba Eduppadharku
Vangi Sendru Paarthadharku
Pootu Ondru Poaattirukku

Manam Thirandha Maatrathirku
Vangi Moodiya Kaatchikku
Ellam Poana Unarvenakku

Panam Ennai Veezhthirikku
Niraivin Artham Unarthirukku

Vaazhvin Paadam Purindhirukku

No comments:

Post a Comment